தேசிய செய்திகள்

போதை பொருள்கள் வாங்கிய வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

போதைபொருள்கள் வாங்கிய வழக்கில் நடிகை ரியாவின் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் விசாரணையின் போது அதனை ரியா ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரியா தனது வக்கீல் மூலம் ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறியுள்ளார். மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்து இருந்தார். ரியாவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு