தேசிய செய்திகள்

டெல்லியில் மத்திய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை

டெல்லியில் மத்திய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பணிக்கு செல்லும்போது, கூடுமானவரை, அரசு மற்றும் தனியார் வாகனங்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை (பஸ், ரெயில்) பயன்படுத்துமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் மத்திய அரசு ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. எப்போதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணியுமாறும் கூறியுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு