தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா

மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 24-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி வைரஸ் தொற்று பாதிப்பில் கர்நாடகம், நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கு அமலில் உள்ளது. பெங்களூருவில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

இதற்கிடையே மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 24-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எடியூரப்பா, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 24 ஆம் தேதி வரை இருக்கும். அதன்பிறகு 2-3 தினங்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்