தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சிக்கு ஆதரவு : சிவசேனா எம்.பி

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா எம்.பி தெரிவித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் வாக்களித்த சிவசேனா, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால், மாநிலங்களவையில் வாக்கெடுப்பை புறக்கணித்தது.

அதோடு, குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றை சிவசேனா தலைமை விமர்சித்தும் வருகிறது. திடீரென தன் நிலையை மாற்றியது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, குடியுரிமைச் சட்டம், சாவர்க்கரின் கருத்துகளுக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.,யான ஹேமந்த் பாட்டீல், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி.,க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹிங்கோலி தொகுதியின் எம்பி.யான ஹேமந்த், மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், நான் சில கூட்டங்களில் பங்கேற்க வேண்டியிருந்ததால் குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி-க்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்க முடியவில்லை.

அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். மக்களவையில் இந்த விவகாரங்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். சிவசேனா எப்போதுமே இந்துத்வா கட்சிதான். எனவே நான் இந்த விஷயங்களை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு