தேசிய செய்திகள்

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரெயில், விமான போக்குவரத்து சேவையும் வரும் மே 3 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு, மத்திய அரசு என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.

எனினும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வரும் 20 ஆம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள்,சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்