இதற்கு ஹர்தீப் சிங் புரி பதில் அளித்து கூறியதாவது:-
சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து தடையில்லா சான்றிதழ்களும் உரிய முறைப்படியே சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்கான அனைத்து சிறு சிறு திட்டங்களுக்கும் பெறப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதியே பெறப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா' திட்டம், மத்திய மாநாட்டு மையம், பிரதமர் இல்லம், சிறப்பு பாதுகாப்புக்குழு கட்டிடம், துணை ஜனாதிபதி இல்லம் ஆகிய சிறு சிறு திட்டங்களுக்கான, சுற்றுச்சூழல் அனுமதி கடந்த மே 31-ந்தேதி பெறப்பட்டது.
சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக நடத்தப்பட்டன. பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்புக்குழு செயலகம் ஆகியவற்றுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், நிபுணர் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையுடன் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.