தேசிய செய்திகள்

பீகார் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார் நிதிஷ் குமார்

பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் ஆறாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

பாட்னா,

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரி பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து காட்சிகள் வேகமாக அரங்கேறின.

நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். இதையடுத்து, கவர்னர் கேசரிநாத் திரிபாதி நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதன்படி இன்று காலை 10 மணிக்கு நிதிஷ் குமார் பீகார் மாநில முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகாரின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பாஜகவின் சுஷில் குமார் மோடி பதவியேற்றுக்கொண்டார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு