தேசிய செய்திகள்

பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கலாட்டா...?

பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

புதுடெல்லி

பஞ்சாப் மாநில காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றோர் மாநிலமான சத்தீஸ்கரிலும் உள்கட்சி மோதல் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக இருக்கும் பூபேஷ் பாகல் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், எஞ்சிய பதவிக்காலத்தை தமக்கு தர வேண்டும் என அமைச்சரும் அதிருப்தி தலைவருமான சிங் தியோ போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே 15 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.அவர்கள் காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து முதலமைச்சருக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 90 இடங்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 70 எம்எல்ஏக்கள் உள்ளனர்.இவர்களில் 60 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக முதல்மந்திரி வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு