தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அவசர பயணங்களுக்கு மீண்டும் இ - பாஸ் முறை அறிமுகம்

மராட்டிய மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், மாநிலத்தில் முழு ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அலுவலகங்கள் பணியாளாகளின் எண்ணிக்கை, திருமண நிகழ்ச்சிகள், பயணங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதற்காக இணையவழியில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் சமாப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மராட்டியத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு