தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த பங்களாவுக்கு குடிபெயர்ந்தார் அமித் ஷா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆண்டு மறைந்தார். இதையடுத்து காலியான அவரது பங்களாவில் அமித் ஷா குடிபெயர்ந்தார்.

புதுடெல்லி,

டெல்லி, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்தார். அங்கு அவர் கடந்த 14 ஆண்டுகளாக வாஜ்பாயி தங்கியிருந்தார். வாஜ்பாய் மறைவுக்கு பிறகு காலியாக இருந்த அந்த பங்களாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடி பெயர்ந்துள்ளார். முன்னதாக அவர் அக்பர் சாலையில் உள்ள பங்களாவில் அமித்ஷா தங்கியிருந்தார்.

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு வாஜ்பாயி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் இருக்கும் வாஜ்பாயின் பங்களா, அந்த பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்