தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக ”ஆப்பிள் நிறுவன” ஆன்லைன் ஸ்டோர்; விரைவில் திறக்கப்படுகிறது

இந்தியாவில் முதல் முறையாக ”ஆப்பிள் நிறுவன” ஆன்லைன் ஸ்டோர் திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

உலகின் மிக பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை இந்தியாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று ஐபோன் தலைமை அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின் ஆன்லைன் ஸ்டார் நல்ல வரவேற்ப்பை பெரும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. தற்போது தனது தயாரிப்புகளை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மற்றும் அமேசான்.காம் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், ஆப்பிள் தனது ஆன்லைன் ரீடைல் தளத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், வாடிக்கையாளர் உதவி மையத்தையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது