தேசிய செய்திகள்

உ.பி.யில் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

விபத்துக்கு காரணமாக இருந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் ஹல்டி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலை 31ல் உள்ள பெல்ஹாரி தாலாவில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்த கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாலிக்புராவில் வசிக்கும் ராணுவ வீரர்கள் தஞ்ஜி யாதவ் (வயது 35), அருண் யாதவ் (வயது 30) ஆகியோர் தங்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது, இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்" என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்