தேசிய செய்திகள்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை ஆஷிஷ் மிஸ்ரா கைது - டிஐஜி

விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில், விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு கொடுக்காததால் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். மற்றும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததால் கைது செய்யப்பட்டதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்