தேசிய செய்திகள்

அசாமில் 3.5 கி.மீ. நீள தேசிய கொடியுடன் பேரணியாக சென்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

அசாமில் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணியாக சென்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு உள்ளது.

கோரேஸ்வர்,

பின்லாந்து நாட்டில் இந்த வருடம் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் பட்ட போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தடகள வீராங்கனை ஹீமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் அவரை கவுரவிக்கும் வகையிலும் மற்றும் இளைஞர்களிடையே தேசத்தின் பெருமையை உயர்த்தும் வகையிலும் பெரிய அளவிலான இந்த தேசிய கொடி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த கொடியை 45 பேர் சேர்ந்து உருவாக்கி உள்ளனர். 8 தையல்காரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிக்காக எந்தவொரு ஊதியமும் அவர்கள் பெறவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களது ஆதரவை வழங்கி உள்ளனர்.

அதன்பின்னர் இந்த பெரிய கொடியை நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது தலைக்கு மேலே பிடித்தபடி பேரணியாக சென்றுனர்.

இந்திய கொடி குறியீடு, 2002ன் படி பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது. இது தேசிய கொடியை அவமரியாதை செய்வது போலாகும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் கொடிகளை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு