தேசிய செய்திகள்

அசாம்: ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

கடந்த ஜனவரி 26-ந்தேதி ரூ.1.80 கோடி மதிப்பிலான 336 பைகளில் இருந்த போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கச்சார்,

அசாமில் போதை பொருள் கடத்தல் நடக்கிறது என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கச்சார் மாவட்ட போலீசாருடன் இணைந்து, அசாம் ரைபிள்ஸ் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், ஜிரிகாட் சந்தை அருகே நந்தன்கனன் பாலம் பகுதியில், நடந்த வேட்டையில், 116.2 கிராம் எடை கொண்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி 26-ந்தேதி 336 பைகளில் இருந்த ரூ.1.80 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்