தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் இம்ரான்கான் உருவபொம்மை எரிக்க முயற்சி

ஐதராபாத்தில் இம்ரான்கான் உருவபொம்மை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முஸ்லிம் ராஷ்டிரிய மஜ் அமைப்பினர் சத்தார் என்பவர் தலைமையில், பாகிஸ்தான் பிரதமரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இம்ரான்கானின் உருவபொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த போராட்டம் குறித்து சத்தார் கூறுகையில், எல்லை பயங்கரவாதத்துக்கு தொடர் ஆதரவு போன்ற பாகிஸ்தானின் நடவடிக்கையை கண்டித்து எங்கள் கோபத்தை வெளிப்படுத்த விரும்பினோம் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்