தேசிய செய்திகள்

மும்பை பெருநகர் பகுதி ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

மும்பை பெருநகர் பகுதி ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நேரத்தில் ரெயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சில இடங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் மும்பையில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.10 ஆக தான் இருந்து வந்தது.

இந்தநிலையில் கோடைகாலத்தில் ரெயில் நிலையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தடுக்க மத்திய ரெயில்வே பிளாட்பார கட்டணத்தை ரூ.50 ஆக அதிகரித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மும்பை பெருநகர பகுதியில் உள்ள சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாதர், எல்.டி.டி. ஆகிய ரெயில் நிலையங்களிலும் மும்பை பெருநகரில் உள்ள தானே, கல்யாண், பன்வெல், பிவண்டி ரோடு ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், "இது தற்காலிக கட்டண உயர்வு தான். 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ள பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு வரும் ஜூன் 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்