தேசிய செய்திகள்

நீண்ட தூர பயணத்தில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு - விமான போக்குவரத்து மந்திரி

நீண்ட தூர பயணத்தில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு என விமான போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா பேசும்போது விமானக் கட்டணத்தையும் ஆட்டோக் கட்டணத்தையும் ஒப்பிட்டு பேசினார்.

இது குறித்து அவர் கூறியபோது, இன்றைய காலத்தில் நமது நாட்டில் விமான கட்டணம் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, நீண்ட தூர பயணத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கான கட்டணத்தை ஒப்பிட்டால் ஆட்டோ சவாரியை விட விமானக் கட்டணம் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். இது எப்படி என்று கேட்பீர்கள். 2 பேர் ஒரு ஆட்டோவில் சவாரி செய்தால் அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10-ஐ கட்டணமாக கொடுக்கிறார்கள். அப்படியென்றால் இருவரும் ஒரு கிலோ மீட்டருக்கு தலா ரூ.5 செலவிடுகின்றனர்.

ஆனால் நீண்ட தூரம், குறிப்பாக கோரக்பூரில் இருந்து மும்பைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ விமானத்தில் பயணம் செய்தீர்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூ.4 மட்டும்தான். அதற்காக குறுகிய தூரத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. விமான கட்டணம் குறைவு என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன்.நம்மைப் போன்றதொரு பெரிய நாட்டில் தற்போது தொலைதூர விமானப் பயணம் பெரிதும் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதில் கட்டணம் குறைவு. அதேநேரம் விமான பயணம் விரைவாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. என அவர் இவ்வாறு கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு