ராஞ்சி,
ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், அரசை கவிழ்க்க முயற்சித்தனர் என கூறி அக்கட்சியின் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள சிங் என்பவர் புகார் அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, நிவாரண் மகதோ, சுனில் குமார் சிங் மற்றும் அபிஷேக் துபே ஆகிய 3 பேரை கடந்த ஜூலையில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ராஞ்சி சிறப்பு லஞ்ச ஒழிப்பு வாரிய கோர்ட்டானது 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.