தேசிய செய்திகள்

வங்கிகள் நாளை (31-ம் தேதி) இரவு 8 மணி வரை செயல்படும் ரிசர்வ் வங்கி தகவல்

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் நாளை (31-ம் தேதி) இரவு 8 மணி வரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. #Banks #RBI

புதுடெல்லி,

மகாவீர் ஜெயந்தி (29ம் தேதி), புனிதவெள்ளி(30-ம் தேதி), (ஏப்ரல் 1-ம் தேதி)வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாகும்.

ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில் பாதிப்பு உண்டாகும் என்பதால், நாளை (மார்ச் 31- ம்தேதி ) சனிக்கிழமை இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக நாளை இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு