புதுடெல்லி,
டெல்லி, மும்பை உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில், பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம். இந்நிலைமை விரைவில் சரி செய்யப்படும், பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளது.