தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் -தலைமை தேர்தல் ஆணையர்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

தந்தி டிவி நிருபருக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். புயல் எச்சரிக்கை தொடர்பாக இடைத்தேர்தல் தள்ளிவைக்கபட்டதை எதிர்கட்சிகள் விமர்சித்தனர்.

இடைத்தேர்தல் ஒத்திவைக்காமல் இருந்து இருந்தால் புயலால் தேர்தலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அதனால் நாங்கள் ஒத்திவைத்தது சரிதான் தேர்தல் ஆணையம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் தேர்தல் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வந்ததும் தேர்தல் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு