இதற்கு மேற்கு வங்காள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மாநில நிதி மந்திரி அமித் மித்ரா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், இந்திய பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கி வரும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதற்கு அதிர்ச்சியும், எச்சரிக்கையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய பொருளாதாரத்தில் ரூ.36.76 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்குவதால் 30 கோடி பாலிசிதாரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என கூறியுள்ளார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கும் நடவடிக்கையால் பெரிய இடையூறு ஏற்படுவதுடன், சுமார் 2 கோடி சில்லரை காப்பீட்டாளர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.