தேசிய செய்திகள்

மைசூரு ரோடு-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

மைசூரு ரோடு-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மைசூரு ரோடு-கெங்கேரி இடையேயான மெட்ரோ வழித்தடத்தில் திடீரென தொழில்நுட்பகோளாறு ஏற்பட்டது.

இதனால் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 25 நிமிடங்களுக்கு ஒரு முறை என்று ஒருவழிப்பாதையில் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் மைசூரு ரோடு- கெங்கேரி இடையேயான வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு