தேசிய செய்திகள்

100 கோடி தடுப்பூசி டோஸ்கள்; தற்சார்பு இந்தியாவின் உண்மையான வெற்றிக்கதை - பாரத் பயோடெக் நிறுவன தலைவர்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 100 கோடியை கடந்தது. இந்த மைல்கல் சாதனைக்காக மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

அந்தவகையில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனமும் பாராட்டு தெரிவித்து உள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்பது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மைல்கல் சாதனையில் பங்களிப்பு செய்ததற்காக பாரத் பயோடெக் பெருமை அடைகிறது. இது அரசு, தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து குடிமக்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். இது தற்சார்பு இந்தியாவின் உண்மையான வெற்றிக் கதையாக அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்