தேசிய செய்திகள்

தேரா வாரிசு ஹனிப்ரீத் நேபாளம் தப்பிச் செல்ல முயற்சி?

பாலியல் குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப்பட்ட ஹரியானாவின் தேரா சச்சா சௌதாவின் தலைவர் குர்மீத்தின் வாரிசு என அறியப்படும் ஹனிப்ரீத் நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க பிகாரில் கடும் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

பட்னா

இந்திய-நேபாள எல்லையை ஒட்டிய பிகாரின் ஏழு மாவட்டங்களில் கடும் கண்காணிப்பும், எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள், சாலைகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் ஹனிப்ரீத் விவகாரத்தில் ஹரியானா மாநில அரசு முறையான கோரிக்கை எதையும் கொடுக்கவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் நாளை நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் அந்த உயர் அதிகாரி. ஹனிப்ரீத்தின் புகைப்படம் ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா மாவட்டத்தில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் அதிகம் குழுமியிருப்பது காவல்துறையினரை அதிகம் எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்