தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

இந்தியாவின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் மாற்றத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், கடந்த ஓராண்டாக சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் முன்னேற்றத்தில் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மேடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முன்னேற்றம் வேகமெடுத்து வரும் இந்த சூழ்நிலையில், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்துக்கு அதிக முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மேடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கெள்கிறேன். இந்த துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் உக்கமளிப்பதாக உள்ளது. இந்தப் பயணத்தில் பங்குதாரராக இணைந்திருப்பதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு