தேசிய செய்திகள்

மத்திய மந்திரி பதவியில் இருந்து உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா

மத்திய மந்திரி பதவியில் இருந்து உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

பீகார் மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா. மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக இவர் பதவி வகிக்கிறார்.

உபேந்திரா குஷ்வாகா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நடைபெற்ற பாரதீயஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் உபேந்திரா கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து உபேந்திரா கூறியதாவது:-

மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது. நிதிஷ் ஜியின் அஜெண்டா என்னையும் எனது கட்சியையும் அழிக்க வேண்டும் என்பதுதான். இது பாரதீய ஜனதாவால் தொடங்கப்பட்டது. பீகார் தேர்தலில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் அதிகரித்து தரப்பட்டு உள்ளது. ஆனால் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு