தேசிய செய்திகள்

பா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் வருமான வரி சோதனை - ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்

பா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். குவாலிட்டி ஹார்டுவேர், உமாங் சேரீஸ், அலெக்சியா பேனல்ஸ், குவான்டம் பல்கலைக்கழகம், பஞ்சாப் பிளைவுட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட இந்த 13 நிறுவனங்களில் விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள் மற்றும் முதலீடுகள் என ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

கோயல் 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் சமீபத்தில் டேராடூன் மேயர் பதவிக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்