லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. ஹரிஷ் திவிவேதி. இவர் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் தன் ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பள்ளி முடிந்து சிறுவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் மீது எம்.பி.யின் கார் மோதியது. படுகாயமடைந்த சிறுவன், மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். மேல்சிகிச்சைக்காக லக்னோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சல்லும் வழியில் அவனது உயிர் பிரிந்தது.
அவன்பெயர் அபிஷேக் (வயது 9) ஆகும். அவனுடைய தந்தை சத்ருகன் ராஜ்பார் போலீசில் புகார் கொடுத்தார். அடிபட்ட சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்க்காமல், எம்.பி. அப்படியே சென்று விட்டதாக அவர் கூறியிருந்தார். அதன்பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.