தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா இன்று சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பானது சில நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சிறப்பு குழு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு