தேசிய செய்திகள்

மணிப்பூர் மாநிலத்தில் குண்டு வெடித்தது

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று அதிகாலை குண்டு வெடித்தது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில், தங்கல் மார்க்கெட் பகுதியில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. அதிகாலை என்பதால் கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. ஆள்நடமாட்டமும் இல்லை. இதனால் உயிர் சேதம் இல்லை. வரிசையாக இருந்த சில கடைகளில் உள்ள கதவுகள் மட்டும் சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி வளைத்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்