தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெய்ப்பூரில் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள செயின்ட் தெரசா பள்ளி, எம்.பி.எஸ். பள்ளி, வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் மனக் சவுக் பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக பேலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுனர்கள் பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளிகள் முழுக்க சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த 1ம் தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்