தேசிய செய்திகள்

பாரத் பெட்ரோலியம் பங்கு விற்பனைக்கு மந்திரிசபை ஒப்புதல் - நிர்மலா சீதாராமன் தகவல்

பாரத் பெட்ரோலியம் பங்கு விற்பனைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருப்பதாக நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாரத் பெட்ரோலியம் உள்பட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் வழங்கி இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதன்படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 53.29 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இந்திய கப்பல் கழகம், இந்திய கன்டெய்னர் கழகம் ஆகியவற்றின் பங்குகளும் விற்கப்படுகின்றன. இதைப்போல வடகிழக்கு மின்சார கழகம், தெக்ரி ஹைட்ரோ கழகம் ஆகியவற்றின் பங்குகளும் விற்பனைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இவற்றை தவிர சில குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை 51 சதவீதத்துக்கு கீழே வைத்துக்கொள்ள மந்திரி சபை ஒப்புதல் அளித்ததாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்