தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கனடா பிரதமர் சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #JustinTrudeau #RahulGandhi

தினத்தந்தி

புதுடெல்லி,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். இந்நிலையில் புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ ராகுலிடம் விசாரித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது