புதுடெல்லி,
மக்களவையில் முத்தலாக் தடை மசேதா மீதான விவாதத்தின் பேது பாரதீய ஜனதா உறுப்பினர் ரமா தேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக் கெண்டிருந்தார். அப்பேது ரமாதேவி குறித்து ஆசம் கான் ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளை கூறினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆசம்கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஆசம்கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவையில் ஆசம்கான் செய்த தவறை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் கடும் தண்டனை வழங்க சபாநாயகர் உத்தரவிட தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் பாரதீய ஜனதா பெண் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசம்கான் அவையில், திங்கள்கிழமை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இந்த நிலையில், ஆசம்கான் மன்னிப்பு கேட்டாலும் தான் ஒருபோதும் அவரை மன்னிக்க மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமா தேவி எம்.பி கூறினார். தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரமாதேவி இவ்வாறு கூறினார். ரமாதேவி மேலும், கூறும்போது, அனைவருக்கும் தாய், மனைவி, மகள் உள்ளனர். ஆசம்கானின் கருத்து பெண்களை மட்டும் காயப்படுத்தாமல் ஆண்களின் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றார்.