தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கில் மோசடி மூவர் கைது

வருமான வரிக்கணக்கை மோசடியாக திருத்திய குற்றச்சாட்டில் மூவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

புதுடெல்லி

மூவரும் சேர்ந்து 13 வருமான வரி செலுத்திய நபர்களின் வரி விபரங்களை திருத்தி அவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை பூர்வாங்க விசாரணை நடத்தியது. மூவரும் இன்னும் பிறரும் சேர்ந்து 13 நபர்களின் பான் கார்ட் விபரங்களை பயன்படுத்தி ரூ 9.16 லட்சத்தை பயனாளிகளின் கணக்கில் பணத்தை செலுத்த காசோலை வழங்க வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. தற்போது மூவரில் ஒருவர் இறந்து விட்டார்.

ஆனால் வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக பணத்தைத் திரும்பச் செலுத்த எவ்விதமான ஆணையையும் பிறப்பிக்கவில்லை. பணத்தைத் திரும்பப் பெற தேர்வு செய்யப்பட்ட 13 பேரும் தங்களக்கு பணத்தை திரும்பத்தரும்படி கோரிக்கை எதையும் விடுக்கவில்லை. ஆகையால் இம்மோசடியில் தொடர்புடைய ஒரு வருமானத் வரித்துறை அதிகாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு