தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. தேர்வில் கற்றல் குறைபாடுடைய மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தலாம்

சி.பி.எஸ்.இ. தேர்வில் கற்றல் குறைபாடுடைய மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. பயிலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்கள் தேர்வில் சாதாரண கால்குலேட்டரை பயன்படுத்த இந்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த வசதியை பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி முதல்வரின் வழியாக வருகிற 28-ந் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இல்லாமல் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்வின்போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது.

இந்த தகவலை சி.பி.எஸ்.இ. ஆணையர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் மடிக்கணினி மூலம் தேர்வு எழுதும் வசதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது