தேசிய செய்திகள்

பிட் அடிக்கும் மாணவர்களை கண்டறிய கல்லூரி கழிவறையில் சி.சி.டி.வி. கேமிராக்கள்

உத்தர பிரதேசத்தில் பிட் அடிக்கும் மாணவர்களை கண்டறிய கழிவறையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

அலிகார்,

உத்தர பிரதேசத்தில் அலிகார் பகுதியில் தரம் சமாஜ் டிகிரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்களுக்கான இந்த கல்லூரியின் கழிவறைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கல்லூரியின் முதல்வர் ஹேம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மாணவர்கள் தங்களது ஆடைகளில் தேர்வுக்கு தயாராகும் முன் பிட் பேப்பர்களை மறைத்து வைத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களது இந்த செயலை குறைக்கும் வகையில் கழிவறைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் எந்த தலையீடும் இல்லை. எனவே போராட்டம் நடத்துவது தேவையில்லை என கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு