தேசிய செய்திகள்

பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை மேனகா காந்தி

பஸ்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை என மேனகா காந்தி கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

பெண்கள் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதி பயன்பாடு தொடர்பாக மத்திய மந்திரி மேனகா காந்தி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான சம்பவங்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுக்களும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்துக்கள் மற்றும் ரெயில்களில் சிசிடிவி பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது.

சிசிடிவி கேமராக்கள் நிலையான விஷயம். சிசிடிவி கேமராக்கள் முன்னதாக வந்து யாரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடமாட்டார்கள். இரண்டாவதாக, மூன்று நாட்களுக்கு மேலாக இருக்காது. மூன்றாவதாக, அதிகமான மக்கள் பயணம் செய்யும் பஸ்களில் பாலியல் பலாத்காரம் நடைபெறாது, ஆனால் பாலியல் தொல்லைகள் நடைபெற கூடும், என மேனகா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

பஸ்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது என்பது பாலியல் தொல்லைகளை தடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திறனாக இல்லை என குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது, ஆனால் பயனற்றதாகிவிட்டது என குறிப்பிட்ட மேனகா காந்தி, பஸ்களில் மில்லியன் கணக்கான மக்கள் இருக்கிறார்கள், அவர்களை நாம் எப்படி பிடிப்பது? நாம் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என குறிப்பிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும் புதிய கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் மேனகா காந்தி பேசிஉள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு