தேசிய செய்திகள்

4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை மார்ச் 1 ஆம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு

4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த கட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெகா ஹெர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு அலைவரிசைகளை கொண்ட சுமார் 2251.25 அளவு கொண்ட 4 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதனை தொடர்ந்து அலைக்கற்றை ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 92 ஆயிரத்து 332 கேடியே 70 லட்ச ரூபாய் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் 4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை வரும் மார்ச் 1 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் டெலிகாம் ஆபரேட்டர்கள் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்