புதுடெல்லி,
இந்தியாவிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக என்ன செய்வதென தெரியாமல் திகைத்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமான சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் கேள்வி எழுந்துள்ளது.
இதனை அடுத்து, இந்திய விடுதிகளில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது விடுதியிலேயே தங்கி இருக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அந்த மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.