தேசிய செய்திகள்

21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்

21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹெலிகாப்டர் கொள்முதல் உட்பட மொத்தம் 46 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேற்கூறிய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு