தேசிய செய்திகள்

மே.வங்கம்: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் நீக்கம்

மே.வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு மம்தா பானர்ஜியின் படம் இடம் பெற்றுள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகிறது. முன்னதாக பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கிய நிலையில் தற்போது மேற்கு வங்க அரசும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது.

தடுப்பூசி சான்றிதழில் முதல்- அமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-45 வயது வரம்பில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மம்தாவின் படம் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்