கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ராஜஸ்தானுக்கு மாற்றம் - கொலிஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்ற மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் நேற்று கூடியது. அதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் ஐகோட்டுக்கும், நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கும், ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை ஐகோர்ட்டுக்கும், தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி டி.நாகார்ஜுனை சென்னை ஐகோர்ட்டுக்கும், ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதி டி.ரமேசை அலகாபாத் ஐகோர்ட்டுக்கும், தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி லலிதா கன்னேகந்தியை கர்நாடக ஐகோர்ட்டுக்கும், மற்றொரு தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி அபிஷேக் ரெட்டியை பாட்னா ஐகோர்ட்டுக்கும் மாற்ற மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்து உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றும் பரிந்துரையை மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள பரேஷ் உபாத்யாய் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார்.

ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜீயத்தின் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது