ராய்கார்,
சத்தீஷ்கார் மாநிலம் சரண்கார்-பிலாய்கார் மாவட்டம் சரியா நகரை சேர்ந்தவர் முஷ்டாக் கான் (வயது 52). பழ வியாபாரி.
இவர் தனது வீட்டின் மாடியில் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்றபோது, பாகிஸ்தான் கொடி இருந்தது. கொடியை கழற்றிய போலீசார் அதை பறிமுதல் செய்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், முஷ்டாக் கானை கைது செய்தனர்.
தகவல் அறிந்த உள்ளூர் பா.ஜனதாவினர், முஷ்டாக் கான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கோரி, சரியா போலீஸ் நிலையத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.