தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன 5 இளைஞர்கள் வழிதவறி சீனா சென்றதாக தகவல்

அருணாசல பிரதேசத்தில் கடந்த வாரம் காணாமல் போன 5 இளைஞர்கள் வழிதவறி சீனா சென்றதாக தகவல்: இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

அருணாச்சல பிரதேச உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தியதாக செய்தி வெளியானதால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் 5 இளைஞர்களும் வழிதவறிச்சீன பகுதிக்குள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனா ராணுவம் பதிலளித்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளைஞர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறும்போது, "காணாமல் போன 5 அருணாச்சல பிரதேச இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்து இன்று சீன ராணுவத்திடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களை விரைவில் அழைத்து வருவதற்கு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்