தேசிய செய்திகள்

காலரா எதிரொலி: காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

காரைக்கால்,

காரைக்காலில் பரவி வரும் வயிற்றுப் போக்கு மற்றும் காலராவால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நலவழித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காலராவால் சிகிச்சை பெற்று வருபவர் களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காலரா எதிரொலியாக காரைக்கால் மத்திய மண்டல நீர்த்தேக்க தொட்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காரைக்கால், பச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை நண்பகல் மற்றும் மாலையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு