தேசிய செய்திகள்

மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு சி.ஐ.டி. போலீஸ் சம்மன்

மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி. நந்திகிராமில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர். திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஓராண்டுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்தவர்.

திரிணாமுல் காங்கிரசில் எம்.பி.யாக, மந்திரியாக இருந்தபோது, சுவேந்து அதிகாரியிடம் சுபப்ரதா சக்ரவர்த்தி என்பவர் மெய்க்காப்பாளராக இருந்தார். அவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி. தனிப்படை போலீசார் ஏற்கனவே சுவேந்து அதிகா வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். 11 போலீசார் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் சுவேந்து அதிகாரிக்கு சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அதில், 6-ந் தேதி (இன்று) கொல்கத்தாவில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்