தேசிய செய்திகள்

ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு-

உடுப்பி (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (வயது24) இவர் பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வருகிறார். இதற்காக ஆன்லைனில் வேலை தொடர்பான விளம்பரங்களை பாக்யஸ்ரீ பார்த்து வந்தார். இந்தநிலையில் அவரது செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில் லிங்க் ஒன்று இருந்தது. அந்த லிங்கில் பாக்யஸ்ரீ சென்றார். அப்போது அதில், வீட்டில் இருந்தே பகுதி நேர வேலை பார்க்கலாம் எனவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்தது. இதனை நம்பிய பாக்யஸ்ரீ அதில் இருந்த வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 239 அனுப்பினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மர்மநபர் கூறியபடி பகுதி நேர வேலை வாங்கி தரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பாக்யஸ்ரீ அதில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாக்ஸ்ரீ இதுகுறித்து உடுப்பி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மர்மநபரையும் போலீசார் தேடி வருகிறார்கள். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு